• நல்லோர் நட்பு நன்மை தரும்

    * நல்லவர் தொடர்பால் உண்டாகும் நன்மைகளை எண்ணிப் பாருங்கள். வீட்டில் வாழும் சுண்டெலி கொல்லப்
    படுகிறது. அதுவே கடவுளின் வாகனமாகும் போது,மூஷிக வாகனம் என்று புனிதமானதாக விரும்பி வணங்கப்படுகிறது. 
    * பாம்பு வெறுக்கப்பட்டு, காணும் மனிதனால் அடிபட்டு மாள்கிறது. ஆனால், சிவபெருமானின் கழுத்தில் இருக்கும்போது, காண்பவர் அனைவரும் நாகதேவதை என்று தலைதாழ்த்தி வணங்குவர். 
    * பளிச்சென்று சுத்தமாக இருக்கும் வெள்ளை நூலை யாரும் விரும்பி அணிவதில்லை. ஆனால், அந்நூலில் கண்ணுக்கு அழகும், நறுமணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்து விட்டால் அதுவே பெண்களின் கூந்தலில் மங்கலகரமாய் இடம் பெற்றுவிடுகிறது. 
    * தீயவர்களாக இருந்தாலும், நல்லவர்களின் உறவைப் பெற்றுவிட்டால் நாளடைவில் மதிக்கத்தக்கவர்களாக மாறிவிடுவார்கள். நாம் யாருடன் சேர்கிறோமோ அவர்களின் குணம் நம்மையும் அறியாமல் ஒட்டிக் கொண்டுவிடும். 
    - சாய்பாபா 

0 comments:

Post a Comment