• சாதகருக்குப் பொறுமை தேவை

    * பூனைக்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும், எத்தனை அன்பு பாராட்டினாலும் நாம் கவனிக்காத போது பதார்த்தங்களைத் திருடிவிடும். அதுபோல், மனம் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும், திசை மாறி விடுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் மனதைச் செம்மைப்படுத்த எப்போதும் ஜபம், தியானம் போன்றவற்றில் விடாது பழக வேண்டும். நடக்கும் போதும், அமரும் போதும், வேலையில் ஈடுபடும் போதும் தைலதாரை போல விடாது இறைநாமங்களை ஜபிக்க வேண்டும்.
    * தன்னை வேரோடு வெட்டிக் கொண்டிருப்பவனுக்கும் மரம் நிழலைத் தருகிறது. அதுபோல, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட சாதகர் தன்னை துன்புறுத்துவோரையும் பொறுக்கும் குணமுடையவராக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆன்மிகப் பயணத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது தெளிவாகும்.
    * நீதிமன்றத்தில் நாம் சந்திக்கும் வழக்கை எதிர்த்து வெற்றி பெற எவ்வளவோ பாடுபடுகிறோம். திரைப்படம் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க எவ்வளவோ சிரமப்படுகிறோம். இப்படி அற்பமானவையெல்லாம் நமக்கு முக்கியமாகத் தெரிகிறது. இந்த ஆர்வத்தை ஆன்மிக வாழ்வில் காட்டினால் என்றைக்கும் அழியாத பேரின்பத்தை அனுபவிக்கலாம். 
    - மாதா அமிர்தானந்தமயி

0 comments:

Post a Comment